Sunday 13 September 2015

World Philosophies

கூடாத செயல்கள் பத்து

1. தியானம் புரிபவரின் நிஷ்ட்டையை கலைக்க கூடாது.

2. தர்மம் செய்பவரை தடுக்க கூடாது.
3. தாய் தந்தையர் நின்றுகொண்டிருக்க ஒருவர் அமரக்கூடாது.
4. தண்ணீர் என்று ஒருவர் கேட்டால் இல்லை என்று சொல்லவே கூடாது.
5. ஒருவர் தான் செய்த தருமங்களை பற்றி நினைத்து கூட பார்க்ககூடாது.
6. கையில் ஒரு பொருள் இருக்க அதை இல்லை என்று கூறக்கூடாது.
7. மறந்தும் கூட தன் குருநாதரை ஒருவர் நிந்தனை செய்யகூடாது. 
8. அதிகாலையில் உறங்க கூடாது.
9. நீர்நிலைகளில் முதலில் கால் வைக்க கூடாது.
10. நல்ல உறக்கத்தில் உள்ளவர்களின் உறக்கத்தை கெடுத்தல் கூடாது.

ஏழு கட்டளைகள்


1. பொய் சொல்லாதே

2. தீயவருடன் பழகாதே
3. ஆத்திரம் கொல்லாதே
4. கடமை தவறாதே
5. திருடாதே
6. கடவுளை நிந்திகாதே
7. கொலை செய்யாதே

உலக தத்துவங்கள் ஏழு


1. விரும்பி போனால் விலகி போகும்

2. விலகி போனால் விரும்பி வரும்
3. காண்பதெல்லாம் உண்மையில்லை
4. உண்மைக்கு என்றும் அழிவில்லை
5. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் 
6. நினைப்பதைப்போல் நடப்பது இல்லை  
7. நேரம் வந்தால் கூடிவரும்


உலக தத்துவங்கள் ஐந்து


1. கொண்டு வந்தால் தந்தை

2. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
3. சீர் கொடுத்தால் சகோதரி
4. கொலையும் செய்வாள் பத்தினி
5. உயிர் காப்பான் தோழன்

Tuesday 25 August 2015

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்கள்

பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து
(புதுச்சேரி மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது)

வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த் தாயே!
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!

தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நீஉயிர் நான்மறப் பேனோ?

செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித்தேனே!
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!

முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து
(தமிழ் நாடு மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது)

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!"

அக்காவுக்கு தங்கையின் பரிசு

அக்காவுக்கு தங்கையின் பரிசு

உனக்கு பரிசாக சூரியனை கொடுக்கலாம்
ஆனால் அது உனக்கு சுடும்

உனக்கு பரிசாக நட்சத்திரத்தை கொடுக்கலாம்
ஆனால் அதை உன்னால் தூக்க முடியாது

உனக்கு பரிசாக அருவியை கொடுக்கலாம்
ஆனால் அது கை நழுவிடும்

உனக்கு பரிசாக மரத்தை கொடுக்கலாம்
ஆனால் அது உனக்கு கனத்தை தரும்

உனக்கு பரிசாக மேகத்தை கொடுக்கலாம்
ஆனால் அதை உன்னால் பிடிக்க முடியாது

அதனால் நான் ஒன்றை பரிசாக தருவேன்
அது எனது இதயம் கணிந்த நல்வாழ்த்துக்கள்

------ கோ.கீர்த்திகா

Wednesday 12 August 2015

விண்ணிற்கு செல்லும் மனிதன்

விண்ணிற்கு செல்லும் மனிதன் 

விண்ணிற்கு செல்லக்கூடிய மனிதன் 
மண்ணிற்கு உணவாகிரன் – ஆனாலும் 
மண்ணின் வழியாக அவன் 
விண்ணினை அடைகின்றான் ஆத்மாவாக 

இறைவனின் அருளால் விண்ணிலிருந்து 
மண்ணிற்கு வரும் மனிதன் – அதே
மனிதன் விண்ணிற்கு செல்கின்றான் 
இறைவனின் மலர் பாதம் சரணடைய   
  
விண்ணிலிருந்து மண்ணிற்கு வருபவன் 
மண்ணினை ஆல வந்தவன் அல்ல 
மண்ணின் மைந்தனாக அவன் 
வின்னிக்கு செல்லும் மனிதன் 

- கோ.கீர்த்திகா

நல்லாசிரியர்

நல்லாசிரியர்

ஒற்றுமையை மனதில் நிறுத்த வைத்து 
நேர்மையான வழியில் நடக்க வைத்து 
தோல்வியிலும் நம்மை சிரிக்க வைத்து 
வெற்றியின் பாதையில் செல்ல வைத்து 
சாதனைகள் பல செய்ய வைத்து 
சரித்திரம் நம்மை பற்றி பேச வைத்து 
அதன் வழி மகிழ்ச்சி கொள்பவரே 
நல்லாசிரியர்...

- கோ.கீர்த்திகா

நம்பிக்கையே சிறந்தது

நம்பிக்கையே சிறந்தது

நம்பிக்கை என்றாலும் சந்தேகம் என்றாலும் ஐந்து எழுத்து தான் ஆனால் அதற்கு இருக்கும் வித்தியாசங்கள் பல 

நம்பிக்கை நாம் ஒருவரை எந்த அளவிற்கு நம்புகின்றோம் என்பது அப்படி என்றல் அவரது மேல் துளி கூட சந்தேகம் என்பது முளைக்காது என்பது என்னுடைய  கருத்து 

சந்தேகம் என்பதனால் நமக்கு வேண்டியவரையோ அல்ல உறவினர்களையோ அல்ல நண்பர்களை பற்றியோ மேலும் புரிந்து கொள்ள முடியுமா என்றால்  அது  இயலாது சந்தேகம் நம்மை பிரிப்பதற்கு நாமே நம் கையில் ஏந்தும் ஆயுதம் 

அன்று ராமர் சிதையின் மீது சந்தேகப்பட்டு இருந்திருந்தால் இன்று ராமாயணம்  என்ற காவியம் , அனைவரும் போற்றி புகழும் ஒரு காவியமாக இருந்திருக்காது .பிறர் நம்மீது வைத்திருக்கும்  நம்பிக்கை நம்மை தவறான பாதைகளுக்கு செல்ல விடாமல் நம்மை காக்கின்ற ஒரு கவசம் .

அனைவரும் நம்பிக்கை கொள்வோம் நம்பிக்கையே வாழ்க்கை என்று அதற்காக அனைத்தையும் நம்பிவிடக் கூடாது . அளவுக்கு மீறி பிறரை நம்பினோம் என்றால் அது கண்மூடித்தனமான நம்பிக்கை அப்படி செய்யக்கூடாது 

பிறரை நம்புவதைவிட பிறரின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் இதுவே தமிழரின் மரபு 

- கோ.கீர்த்திகா

நகைச்சுவை

நகைச்சுவை  

வானத்துல இருக்குது நிலா – அதை 
சுட்டெரிப்பது தான் பகலா

கண்களிலே இருப்பது கருவிழி 
காட்டிலே இருப்பது புதைக்குழி 

மனிதர்களை படைத்தான் சாமி –அவங்கிட்ட
மாட்டிக்கிட்டு முழிக்குது இந்த பூமி 

முந்திரி மரத்துல இருக்குது முந்திரி 
தலைவனே நம்ம நாட்டின் மந்திரி 

வானத்துல இருக்கு சன்
நிலத்துல இருக்கு மண்
கடையில இருக்கு பன்

சூரியன் உதிர்வது கிழக்கு 
ஆசிரியர் அளிப்பது படிப்பு

- கோ.கீர்த்திகா

கனவுகள்

கனவுகள்

கனவுகள் என்றும் இன்பத்தை தரும் – அது 
கனவாக கனவில் வரும்போது 

நினைவுகள் கனவாக மாறும் – அது 
நடந்து முடிந்த பிறகு 

கனவுகள் இனிமையாக இருக்கும் – அது 
கனவாக இருக்கும் வரை 

கனவுகளை கண்டால் --- அது  கனவாகிறது 
நினைவுகளை நினைத்தால் --- அது கனவாகிறது 

- கோ.கீர்த்திகா

கண்டதும் கேட்பதும் வாழ்வதற்கே

கண்டதும் கேட்பதும் வாழ்வதற்கே

கண்டதும் கேட்பதும் வாழ்வதற்கே  
கற்றதும் பெற்றதும் வெல்வதற்கே

தோல்விகள் வரும் உன்னை புதைப்பதற்கே –அதை
வென்று வா நாட்டை புதிதாய் படைப்பதற்கே

நற்கல்வியை  பெற்றுக்கொள் மழலையிலே
நாளை உலகை வைத்துக்கொள் உன் கைகளிலே 

பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையை மனதில் நினைத்தால்
கூட இன்பமே

புத்தகத்தின் வழி நீ அனைத்தையும் கற்றுக்கொண்டால்
ஓடிவிடும் உன் துன்பமே...

- கோ.கீர்த்திகா

உண்மையான தலைவன்

உண்மையான தலைவன் 

அனைத்து கலைகளிலும் சிறந்தவனா தலைவன் – அல்ல
அனைத்து கலைகளையும் சிற்பிக்க வந்தவனே தலைவன்
மக்கள் கண்களை கலங்க வைப்பவன தலைவன் – அல்ல 
மக்கள் கண்ணீரை துடைக்க வந்தவனே தலைவன் 
தோல்வியை கண்டு அஞ்சுபவன் தலைவன் – அல்ல 
தோல்வியுலும் வெற்றியை காண்பவனே தலைவன்
மக்களது துன்பத்தை பார்த்து சிரிப்பவன தலைவன் – அல்ல  
மக்களது துன்பத்தை போக்கி அவனை சிரிக்க வைப்பவனே தலைவன்
செல்வத்திற்காக நாட்டை அழிப்பவனா தலைவன் – அல்ல 
செல்வத்தை வைத்து நாட்டை வளர்பவனே தலைவன் 
இவ்வுலகை  படைத்தவன் இறைவன் – அதை 
சரியாக காப்பவனே தலைவன்

- கோ.கீர்த்திகா                       

Slow the Flow - Save H2O

Useful Links

Related Posts Plugin for WordPress, Blogger...